புனித அயோத்தி
உத்திரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு, ராமபிரானாக மனித ரூபத்தில் அவதரித்து, மனித குலத்தின் உயர்வையும், தர்மத்தின் மகத்துவத்தையும் உலகறியச்செய்த தலமாக விளங்குகிறது.
இந்தப்புனித நகரத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே ஆழமான ஆன்மீகப்பிணைப்பு உண்டு. நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினரால் கி.பி.1885 ஆம் ஆண்டு அயோத்தியில் சத்திரம் அமைக்கப்பட்டு, பகவான் ஸ்ரீராமருக்கான கோயிலும் கட்டப்பட்டது.
தென்னக அயோத்தி
அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் போல தென்னகத்திலும் ஒரு ராமர் கோயில் மற்றும் ஆசிரமம் கட்டுவது எமது சங்கத்தின் முக்கிய இலக்காகும். இது தமிழகத்தின் ராமன் வழிபாட்டை விரிவுபடுத்தவும், ஒவ்வொரு கிராமம் முதல் நகரம் வரை ராம ராஜ்யத்தின் தர்மத்தை நிலைநாட்டவும் உதவும்.