முதியோருக்கான ஆன்மீக இல்லம்

இது ஒரு சாதாரண முதியோர் இல்லம் அல்ல. இங்கு தங்கும் முதியோர்களுக்கு ஆன்மீகச் சூழலில், இறைவழிபாட்டின் மூலம் அமைதியான வாழ்க்கையை, உயர்ந்த சேவை மனப்பான்மையுடன் வழங்கும் புனித இல்லமாக இது அமையும்.

நமது தமிழ் மக்களின் தாய், தந்தையர்கள் தனது வயதான காலத்தில் இறைவனுக்கு அருகில் இறை வழிபாடு செய்தும், இறைவனுக்குத் திருப்பணி செய்தும் இறைவனோடு வாழ்வதிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர். எனவேதான் அதனைக் கருத்தில்கொண்டு, வயதான தாய், தந்தையர்களின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, நமது ஆசிரம வளாகத்தில் முதியோருக்கான ஆன்மீக இல்லம் அமைக்கப்படுகிறது.

Old Age Home

வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

மருத்துவ கண்காணிப்பு

நவீன மருத்துவ வசதிகளுடன் 24 மணி நேரமும் கண்காணிப்புகளுடன் கூடிய தனிப்பணியாளர்கள்.

அன்பான பராமரிப்பு

முதியோர்களை அன்பாகக் கவனித்துக்கொள்ள தனிப்பணியாளர்கள் மற்றும் சிறந்த மனநல ஆலோசனைகள்.

ஆன்மீகச் சூழல்

ஸ்ரீராமனின் தெய்வீக அருளுடன், இறைவனின் நிழலில் மனநிறைவான வாழ்க்கை.