Sacred Food Service - Annadhanam

அன்னதானம் - புனித உணவு சேவை

"பசிப்பிணி போக்கும் பாவை" என்ற உன்னத நோக்கத்துடன், எமது ஆஸ்ரமத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. தூய்மையான முறையில், பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் அறுசுவை உணவுகள் பக்தர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது.

மன்ற உறுப்பினர்கள் தங்களின் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்களில் அன்னதானம் வழங்க முன்பதிவு செய்து, இறைவனின் அருளையும் மக்களின் ஆசியையும் பெறலாம்.

யாகசாலை (யாகம்)

மந்திர உச்சாடங்கள் மூலம் பிரபஞ்ச சக்தியைப் பெற்று, உடல் ஆரோக்கியம் மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் போன்ற பன்முகப் பயன்களை வழங்குகிறது.

தியான மண்டபம்

தியான மண்டபம் மன அமைதி, தியானம் மற்றும் ஆன்மீகத்தேடலுக்கான இடமாகும். ஆழ்ந்த தியானத்தால் உடல்சக்தி பெற்று மற்றும் மனம் இலகுவாகி இறைவனின் ஸ்பரிசத்தை உணரலாம்.

இல்லம் தேடி வழிபாடு

மன்ற உறுப்பினர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அவர்களின் இல்லம் தேடி சென்று சிறப்பு வழிபாடு மற்றும் பஜனைகள் மூலம் பிரார்த்தனை செய்யப்படுகிறது.

அயோத்தி சிறப்பு பூஜை

அயோத்தியில் உறுப்பினர்களுக்காகச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அவர்களின் இல்லத்திற்குப் பிரசாதங்கள் மற்றும் புனித கங்கா நீர் அனுப்பி வைக்கப்படும்.