எமது வரலாறு
இந்திய திருநாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில அயோத்தி மாநகரில் சரயு நதிக்கரையில் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி 2020 ஆம் ஆண்டு ராமர் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டிய நன்னாளில் இருந்து எங்களுக்கும் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் போல தென்னகத்திலும் ஒரு ராமர் கோயில் மற்றும் ஆசிரமம் கட்டுவதற்கும் அதேபோல் அயோத்தியிலும் ஒரு ஆசிரமம் அமைப்பதற்கும் ஒரு ஆவல் உண்டானது.
ஏற்கனவே நாங்கள் ஒரு அமைப்பாக, கூட்டு முயற்சியாக, அயோத்தி கோயில் கட்டுமான பணி நடக்கும் பொழுது எங்களால் ஆன பங்களிப்பை கோயில் கட்டுமான பணிக்கு செய்துள்ளோம். மேலும், தென்னக அயோத்தியை உருவாக்கும் பொருட்டு நாங்கள் மேற்படி தமிழ்நாடு ஜெயராம் யாத்திரை அசோசியேஷன் என்ற கூட்டினை பெயரில் 2024 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கத்தின் பதிவு செய்து முழு முயற்சியாக தென்னகத்தில் ராமர் கோவில் மற்றும் ஆசிரமங்கள் அமைக்க முழு ஈடுபாட்டுடன் முயற்சி எடுத்து வருகிறோம்.
ராமராஜ்யம் - எமது கனவு
ராமராஜ்யம்
பகவான் விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களில் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராமன், மனித வாழ்க்கை எவ்வாறு உயர்ந்ததாக அமையவேண்டும் என்பதைத் தன் வாழ்வால் எடுத்துக்காட்டினார். ஒரு சிறந்த ஆட்சி எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியதே ராமராஜ்யம் ஆகும்.
முக்தி ஸ்தலம்
புனித பூமியான அயோத்தியில் காலடி வைத்தாலே பூர்வஜென்ம வினைகள் நீங்கி, தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும்; முக்தி கிடைக்கும் என்பது உறுதி. உலகில் பிறந்த ஒவ்வொரு இந்துவும் ஒருமுறையாவது ராமஜென்மப்பூமியான அயோத்தியைத் தரிசித்து, இறையருள் பெற வேண்டும்.
ஸ்ரீ ராமா ஆஸ்ரம் - சிறப்பம்சங்கள்
யாகசாலை
மந்திர உச்சாடங்கள் மூலம் மன அமைதி மற்றும் குடும்ப நன்மை.
கோசாலை
நாட்டுப்பசுக்களைப் பராமரிக்கவும், தெய்வத்தின் மறு உருவமாக போற்றவும்.
தியான மண்டபம்
மன அமைதி மற்றும் ஆன்மீகத்தேடலுக்கான அமைதியான இடம்.
நினைவுக்குடில்கள்
உறுப்பினர்களின் குடும்ப நினைவாக அமைக்கப்படும் தங்கும் குடில்கள்.