வரவேற்கிறோம்
பழம்பெருமையும் பண்டைய காலச்சுவடுகளின் தொடர்ச்சியுமான மகத்துவத்தைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனித நகரமாம் அயோத்தி. உத்திரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு, ராமபிரானாக மனித ரூபத்தில் அவதரித்து, மனித குலத்தின் உயர்வையும், தர்மத்தின் மகத்துவத்தையும் உலகறியச்செய்த தலமாக விளங்குகிறது.
தென்னக அயோத்தி
அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் போல தென்னகத்திலும் ஒரு ராமர் கோயில் மற்றும் ஆசிரமம் கட்டுவதற்கும் அதேபோல் அயோத்தியிலும் ஒரு ஆசிரமம் அமைப்பதற்கும் ஒரு ஆவல் உண்டானது.
மேலும் அறியஅன்னதானம் - புனித உணவு சேவை
"பசிப்பிணி போக்கும் பாவை" என்ற உன்னத நோக்கத்துடன், எமது ஆஸ்ரமத்தில் தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. தூய்மையான முறையில், பாரம்பரிய முறைப்படி வாழை இலையில் அறுசுவை உணவுகள் பக்தர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படுகிறது.
மன்ற உறுப்பினர்கள் தங்களின் பிறந்தநாள் மற்றும் விசேஷ நாட்களில் அன்னதானம் வழங்க முன்பதிவு செய்து, இறைவனின் அருளையும் மக்களின் ஆசியையும் பெறலாம்.
எமது சேவைகள்
முதியோர் இல்லம்
முதியோர்களுக்கு ஆன்மீகச் சூழலில் இறை வழிபாட்டின் மூலம் அமைதியான வாழ்க்கை.
ஆன்மீக சுற்றுலா
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து முக்கிய ஸ்தலங்களுக்கும் யாத்திரை.
யாகசாலை
மந்திர உச்சாடங்கள் மூலம் மன அமைதி மற்றும் உடல் ஆரோக்கியம்.