ராமராஜ்யம் - நமது கனவு
ராமராஜ்யம்
பகவான் விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களில் ஏழாவது அவதாரமாகிய ஸ்ரீராமன், மனித வாழ்க்கை எவ்வாறு உயர்ந்ததாக அமையவேண்டும் என்பதைத் தன் வாழ்வால் எடுத்துக்காட்டினார். ஒரு சிறந்த ஆட்சி எப்படி படைக்கப்பட வேண்டும் என்பதையும் உணர்த்தியதே ராமராஜ்யம் ஆகும்.
முக்தி ஸ்தலம்
புனித பூமியான அயோத்தியில் காலடி வைத்தாலே பூர்வஜென்ம வினைகள் நீங்கி, தலைமுறைகளுக்கு புண்ணியம் சேரும்; முக்தி கிடைக்கும் என்பது உறுதி. உலகில் பிறந்த ஒவ்வொரு இந்துவும் ஒருமுறையாவது ராமஜென்மப்பூமியான அயோத்தியைத் தரிசித்து, இறையருள் பெற வேண்டும்.

