ஸ்ரீ ராமஜெயம்

பழம்பெருமையும் பண்டைய காலச்சுவடுகளின் தொடர்ச்சியுமான மகத்துவத்தைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் புனித நகரமாம் அயோத்தி. உத்திரப்பிரதேசத்தில் சரயு நதிக்கரையில் அமைந்துள்ள இந்நகரம் பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு, ராமபிரானாக மனித ரூபத்தில் அவதரித்து, மனித குலத்தின் உயர்வையும், தர்மத்தின் மகத்துவத்தையும் உலகறியச்செய்த தலமாக விளங்குகிறது.

Our Donors

Thiru. R. Radhakrishnan
Bodipatti

 

Smt. Kovamma Kichanna
Amaravathi Dam

 

 

தென்னக அயோத்தி

அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில் போல தென்னகத்திலும் ஒரு ராமர் கோயில் மற்றும் ஆசிரமம் கட்டுவதற்கும் அதேபோல் அயோத்தியிலும் ஒரு ஆசிரமம் அமைப்பதற்கும் ஒரு ஆவல் உண்டானது.

TAMIL NADU JAIRAM YATHRA ASSOCIATION

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து முக்கிய        ஸ்தலங்களின்  ஸ்தல புராணம் கோயில்கள் பற்றிய முக்கிய நிகழ்வுகள், சிறப்பு வழிபாட்டு முறைகள் பற்றி ஆராய்வது மற்றும் மன்ற உறுப்பினர்கள் தேவைக்கேற்ப அவர்களுக்கு சகல வசதிகளும் அந்தந்த கோயில்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்வதும் எங்களது தலையாய கடமையும் நோக்கமும் ஆகும் .

ஸ்ரீராமா ஆஸ்ரமம் சிறப்பு அம்சங்கள்

யாகசாலை

யாகத்தில் புனிதமான பொருள்களை யாக குண்டத்தில் அர்ப்பணித்து மந்திரம், உச்சாடங்கள் மூலம் மன அமைதி, குடும்ப நன்மை, உடல் ஆரோக்கியம் போன்ற பன்முகப் பயன்களை வழங்குகிறது.

கோசாலை

இந்துக்களால் பசுவானது தெய்வத்தின் மறு உருவமாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டுப்பசுக்களை அழிந்து விடாமல் காக்கவும், கோவில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட பசுக்களைப் பராமரிக்கவும் கோசாலை பயன்படுத்தப்படுகிறது.

தியான மண்டபம்

தியானம், மன அமைதி மற்றும் ஆன்மீகத்தேடலுக்கான இடமாகும். தனிநபர் முன்னேற்றம். ஆன்மீக வளர்ச்சி மற்றும் மன அமைதிக்கான மையமாக விளங்கும்.

நினைவுக்குடில்கள்

நமது புண்ணிய பூமியாம் ஸ்ரீராமா ஆஸ்ரம் வளாகத்தில் நமது மன்ற உறுப்பினர்களின் குடும்பத்தின் நினைவாக நினைவுக்குடில்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

முதியோருக்கான ஆன்மீக இல்லம்

இங்கே தங்கும் முதியோர்களுக்கு ஆன்மீகச்சூழலில் இறைவழிபாட்டின் மூலம் அமைதியான வாழ்க்கையை உயர்ந்த சேவை மனப்பான்மையுடன் வழங்கும் புனித இல்லமாக அமைக்கப்படுகிறது.

ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடு

இந்தியா முழுவதும் உள்ள புண்ணிய தளங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ஆன்மீகச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.